தமிழன் வலைதளம்: தமிழ் இல்லாவிட்டால் ஆங்கிலம் இயங்காது....

Wednesday, May 9, 2012

தமிழன் வலைதளம்: தமிழ் இல்லாவிட்டால் ஆங்கிலம் இயங்காது....: நன்றி: தமிழர் உழகம் ,உரைப்பாக்கம் ,சென்னை மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB....

Read more...

தமிழில் எழுதுவதற்கு

Sunday, May 6, 2012

இளநீரில் இவ்வளவுவிஷயங்களா?

இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
மருத்துவ குணம் எப்படி?

தினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான்.

இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகளும் தொலைந்து போகிறது.

எப்படி சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாக குடித்து விடுவதுதான் நல்லது. அதை வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அதை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

இதில் எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது.

இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

இளநீருக்கு மாற்று குளிர்பானமா?

குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்' காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனம் அடையும். குடற்புண் உண்டாகும். இவை எல்லாம் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.

தண்ணீர் போதுமே

தண்ணீரில் இருப்பவை: கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு, தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.

மருத்துவ குணம் எப்படி?

நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், "ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றோருக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து சோர்ந்து விடுவர். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

எவ்வளவு குடிக்கலாம்?

கோடையில் தினசரி குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரைக் குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.
ஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு ஒரேயடியாக நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டுபண்ணும்.
வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடன் படுப்பதும் தவறுதான். இவை எல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாய தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலை தீர்க்கும். பெரிய "மீட்டிங்' நடக்கும்போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம் அது ஒரு "மூடு ரிலாக்சன்ட்.' மனப் பதட்டத்தைக் குறைக்கும்,
மூளையின் வேதிப் பொருளை ஒழுங்குபடுத்தும் தண்ணீர் ஒரு உயிர் நீர்.

இயற்கை பழச்சாறுகள்:

அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லா பழங்களையும் சாப்பிடலாம்.

ஹரி பாபு.

Read more...

இந்திய மாணவருக்கு பேஸ்புக்கில் கோடியில் சம்பளம்

Sunday, April 1, 2012



ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்தியுள்ளது சமூக வலைதளமான பேஸ்புக். அலஹாபாத்திலுள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கழகத்தில்(எம்என்என்ஐடி) அந்த மாணவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதை ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
அந்த மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார்.
இன்னும் 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார். எடுத்தவுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார்.

Read more...

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

Tuesday, March 27, 2012


கவிப்பேரரசு வைரமுத்து

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.
யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.

இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

                          - கவிப்பேரரசு வைரமுத்து 











ஹரி பாபு.

Read more...

முட்டையிடும் பெட்டைக்கோழி!





இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
 
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!

மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!

மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்

கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
 
                   -கவிஞர் வாலி

                                                                                                                         ஹரி பாபு.

Read more...

தமிழுக்கும் அமுதென்று...


பாரதிதாசன்


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

                         - பாரதிதாசன் 

Read more...

அனுபவமே கடவுள்...

                                      



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 

அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 

பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 


பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் 
\
மணந்து பாரென இறைவன் பணித்தான்! 

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 

முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 

வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 

இறந்து பாரென இறைவன் பணித்தான்!
னுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 

ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 

"அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!
 
                                          -கவியரசு கண்ணதாசன்.

Read more...

snow falling effect

Sunday, March 25, 2012

பிளாக்கரில் snow falling effect கொண்டு வர

பிளாக்கரை அழகுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒரு வழிமுறைதான். உங்கள் பிளாக்கர் தளத்தில் அழகான பனித்திவலைகள் விழுவதுபோன்ற விளைவை உண்டாக்கலாம். இது பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை தரும்.


snow falling effect in blogger
snow falling effect


இந்த snow falling effect கிடைக்க


  • உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
  • Dashboard==>Design==>Page Elements என்பதைக் கிளிக் செய்யவும்.
  • SideBar-ல் உள்ள Add Gadget என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் HTML/JavaScript என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அதில் கீழ்வரும் நிரல்வரிகளை Copy செய்து Paste செய்து சேமிக்கவும்.


www.haribabuinfoweb.co.cc


முடிந்தது. இப்போது உங்கள் வலைப்பூவை புதிய சாளரத்தில் திறந்து பார்க்கவும். பனித்துகள்கள் உங்கள் வலைப்பூவில் கொட்டிக்கொண்டிருக்கும்.


கொட்டுகிறதா? இல்லையா? கருத்துரையில் சொல்லுங்க..!!


குறிப்பு: வெள்ளை நிறப் பின்னணிக் கொண்ட வலைப்பூவில் இந்த பனிகொட்டும் விளைவு அவ்வளவாக தெரியாது. இதைப் போக்க உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறத்தை அடர்ந்த வண்ணத்தில் மாற்றினால் விளைவு அருமையாக வெளிப்படும்.


இந்த Snow falling effect தேவையில்லை என நீங்கள் நினைத்தால் மீண்டும் page elements என்பதில் கிளிக் செய்து


நீங்கள் நிரல் வரியைச் சேர்த்த Gadget -ல் Edit கொடுத்து Remove என்பதை கிளிக் செய்து நீக்கி விடலாம்.

Read more...

லேப் டாப் ஆபத்துக்கள்.

Friday, March 23, 2012


லேப் டாப் ஆபத்துக்கள்....லப் டப் அதிர்ச்சி தகவல்கள்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.

Read more...

MY FIRST POST

Wednesday, March 21, 2012




Read more...

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP