ஆண்மை அதிகரிக்க வேண்டுமா நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன

Wednesday, November 13, 2019

பூண்டு:
பூண்டு மருத்துவ குணங்களில் முக்கிய பிரசத்தி பெற்ற ஒன்றாகும். 5 பல் பூண்டு எடுத்து எண்ணெயில் வதக்கி தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் கூடும்.தினந்தோறும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் ஆண் மகன்களின் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.



Third party image reference
முருங்கைக்காய்:
முருங்கைக்காயில் நார்ச்சத்து புரோட்டீன் அமிலங்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. மேலும் முருங்கைக்காய் கடுமையான தலைவலியை போக்கும் வயிற்றுப் புண்களை ஆற்றும். தினமும் முருங்கைக் காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் ஆண்மை பலம் கூடும்.



Third party image reference

அத்திப்பழம்:
அத்திப்பழத்தில் ஏராளமான சக்திகள் அடங்கியுள்ளன. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் இந்த பழத்தை உண்டு வந்தால் ஆண்மை பெருகும். இந்தப் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் இரவு ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் வலுக்கும். சரும நோய்களைப் போக்கக் கூடியதாகும்.


ஹரி பாபு.

Read more...

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 9 விஷயங்கள்!

ஆண்கள் அனைவரும் எப்போதும் பெண்களின் முன்னிலையில் தங்களை மதிப்புமிக்கவர்களாக காண்பிக்கவே விரும்புவார்கள். பெண்கள் முன்னிலையில் நீங்கள் மேலும் உயர உங்களுக்கான சில குறிப்புகள்.
பெண்கள் ஆண்களிடம் எதிர் பார்க்கின்ற விஷயங்கள், பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

முதல் சந்திப்பு:
முதல் சந்திப்பில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு ஏற்படும் உணர்வு சரியானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்றாலும் கூட, நீங்கள் ஒரு பெண்ணை முதல் முதலாய் சந்திக்கும் தருணத்தில் அவர்களுடன் உங்களது உறவை வளர்த்து கொள்ள விரும்புவீர்கள்.

Third party image reference
அதற்காக உங்களை அவர்களின் முன்னிலையில் அழகாக காட்ட முயற்சி செய்வீர்கள். இயல்பாகவே பெண்களுக்கு கூர்மை உணர்வு அதிகம். ஒரு ஆணின் நடவடிக்கை பார்வையை வைத்தே அவர்களைப் பற்றிய முடிவை யூகித்துக் கொள்வதில் பெண்கள் ஆகச் சிறந்த வல்லவர்கள்.

பெண்களுடைய மதிப்பீட்டில் நல்ல அபிப்ராயத்தைக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும். இதற்கான 9 அம்சங்கள்.

1. உயரம்:

Third party image reference
ஏறக்குறைய, பெண்கள் ஒரு ஆணிடம் நோக்கும் முதல் அம்சம் உயரம் தான். நீங்கள் அதிக உயரமானவரோ, அல்லது உயரம் குறைந்தவரோ, நீங்கள்தான் உங்களின் உயரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் உயரமாக இருந்தால் சாய்ந்தோ அல்லது உயரம் குறைவாக இருந்தால், அதைக் காட்டிக் கொள்ளாமலோ இருத்தல் வேண்டும்.

2. தட்டையான வயிறு:
தொப்பையில்லாமல் தட்டையான வயிறு கொண்ட ஆடவரை எந்த பெண்ணும் விரும்புவார். உடல் நலனில் அக்கறை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் தான் பெண்களின் முதல் தேர்வாகும்.
அதற்காக, சிக்ஸ் பேக் வயிறுதான் தேவை என்று நினைக்க வேண்டாம். குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்து வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துக் கொண்டு தட்டையான வயிறு இருக்கும்படி எப்போதும் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

3. வலிமையான புஜங்கள்:
பெண்களுக்கு ஆண்களிடம் மிகவும் பிடிப்பது கம்பீரமான பெரிய அளவுடன் கூடிய வலிமையான கைகள். நல்ல உடற்கட்டுடன் உடைய பெரிய உடல் அவசியமில்லை.
இருப்பினும், குறைந்த பட்சம் உடல் சீரானதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய உடல் பெண்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். பெண்களைக் கவரும் அம்சங்களில் இது குறிப்பிடும்படியான ஒன்றாகும்.

4. நேர்கொண்ட பார்வை:

Third party image reference
கண்ணோடு கண்கள் தொடர்பு கொள்ளும் பழக்கம் ஒரு பெண்ணைக் எளிதில் கவர்ந்திழுக்கும். நீங்கள் பெண்களிடம் பேசும் போது உங்களது பார்வை கவனமாக செலுத்துவதாய் இருக்க வேண்டும். அவர்களிடம் பேசும் போது உங்களின் பார்வையை அங்கும், இங்குமாய் அலையவிடக் கூடாது. அவர்களுடைய கண்களைத் தைரியமாய் பார்த்து பேசுங்கள், அப்படி செய்தால் அப்பெண் நீண்ட நேரம் உங்களுடன் பேசுவதற்கு விரும்புவாள்.

5. தலைமுடி
சுருள் முடியோ, நேர் முடியோ, கருப்போ, பழுப்போ, இவை எதுவும் முக்கியமானது இல்லை. இருப்பினும் தலைமுடி மிருதுவாகவும் மற்றும் சுத்தமாகவும் இருப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
எண்ணெய் பசை, மற்றும் பொடுகு தலைமுடிகளை நிச்சயம் பெண்கள் விரும்ப மாட்டார்கள். அதிகமாக தலை முடி வைத்திருப்பவர்களையும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அதனால், தலை முடிகள் அதிகம் இல்லாமல் மென்மையாகவும், சுத்தமாகவும் பராமரித்தல் அவசியம்.

6. நறுமணம்:

Third party image reference
விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல, வாசனைகளில் பெண்கள் எளிதாக கவரப்படமாட்டார்கள். அவை வியாபரத்திற்காக செய்யப் படும் ஒரு தந்திரம் ஆகும். ஆதலால், செயற்கை நறுமண திரவியங்களில் நாம் குளிக்க வேண்டாம். இது பெண்களைத் நம்மிடம் கொண்டு வரப்போவதில்லை. இருப்பினும், இலேசான, இனிமையான நறுமணம் அவர்களை உங்களிடம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

7. புன்னகை முகம்:
பெண்கள், உங்களின் அனைத்து உருவ அம்சங்களைக் கவனித்த பிறகு, உங்களின் இதழ்களை கவனிக்கத் தவறமாட்டார்கள். பொதுவாக இருண்ட இதழ்கள் கவர்ச்சிகரமாக தோன்றாது. ஆகவே இங்கே ஒரு ஆரோக்கிய குறிப்பு, புகைபிடிப்பதைத் தவிருங்கள். மேலும், உலர்ந்த, வெடிப்புகள் உள்ள உதடுகள் பார்க்க நன்றாக இராது.

Third party image reference
ஆதலால், உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதம் கொண்டதாகவும் வைத்துக் கொள்ள உதட்டுப் பசையை உபயோகியுங்கள். தங்களின் ஓட்டு மொத்த ஆரோக்கியத்தை தங்களின் புன்னகை வெளிப்படுத்தி விடும். ஆகவே, தங்களின் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் படலத்தை நீக்கி விடுங்கள். மேலும் உங்களின் வாயில் துர்நாற்றம் வீசினால், புதினா அல்லது வாய் புத்துணர்ச்சி திரவத்தைப் பயன்படுத்துங்கள்.

8. உடல் நலம்:
உங்களின் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்துங்கள். தங்களின் கை மற்றும் கால் நகங்களை பராமரிக்க அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. இருந்தாலும்கூட, அவை கவனிக்கப் படாமல் போக வாய்ப்பில்லை என்பதை உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், தாங்கள் உடுத்தும் சட்டையில் வியர்வை திட்டுக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், இந்த விஷயமும் பெண்களால், கவனிக்கப் படாமல் போக வாய்ப்பில்லை. தாங்கள் காலுறைகள் மற்றும் காலணிகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், தாங்கள் அணிய நேர்ந்தால், தங்களின் பாதங்களில் இருந்து துர்நாற்றம் வராது பார்த்துக் கொள்ளுங்கள்.

9. தங்களின் ஓட்டு மொத்த ஆளுமை:
உங்கள் முதல் சந்திப்பு மட்டுமே முக்கியத்துவமானதாக இருக்கும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உங்களின் ஒட்டுமொத்த ஆளுமையும் ஒவ்வொரு சந்திப்பிலும் தொடர்ந்து கவனிக்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசும் விதம், பழகும் விதம், உங்களின் நடை, உடை, கம்பீரமான பேச்சு, நகைச்சுவை உணர்வு எல்லாமே முக்கியமானது.
மேற்கண்ட 9 குறிப்புகளையும் சரியாக கையாள வேண்டும். அவ்வாறு கையாண்டால், பெண்களின் மத்தியில் உங்களுக்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும். மேலும், சமூகத்திலும் உயர்ந்த இடம் உண்டு.



ஹரி பாபு.

Read more...

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP