யூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்
Monday, April 6, 2020
யூட்யூப் சேனல் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு தற்போது மேலும் மூன்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது யூட்யூப் நிறுவனம். அவைகள் என்னவென்றும், யாரெல்லாம் அதற்கு தகுதியானவர்கள் என்றும் பார்க்கலாம்.
கடந்த வருடம் யூட்யூப் நிறுவனம் அமல்படுத்திய புதிய விதிப்படி, உங்கள் சேனலில் யூட்யூப் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் உங்கள் சேனல் "1000 Subscribers, 4,000 Hours Watch Time" பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் சேனலில் விளம்பரம் தெரியாது, வருமானமும் ஈட்ட முடியாது.
தற்போது யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் விளம்பரம் தவிர்த்து மேலும் மூன்று வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை யூட்யூப் நிறுவனம் தந்துள்ளது. அவைகள் மூன்றையும், அதற்கான தகுதிகளையும் தற்போது பார்க்கலாம்
1. Channel Memberships (மாத சந்தா)
உங்கள் பார்வையாளர்கள் உங்கள் சேனலுக்கு மாத சந்தா கட்டும் வசதியை யூட்யூப் தந்துள்ளது. இந்த கட்டணம் உங்கள் பார்வையாளர்கள் இருக்கும் நாட்டைப் பொறுத்து வேறுபடும். இந்தியாவில் இருப்பவர்கள் 159 ரூபாய் கட்டுவார்கள், அமெரிக்காவில் இருப்பவர்கள் 4.99 டாலர் (இந்திய மதிப்பு 338 ரூபாய்) கட்டுவார்கள். இப்படி சந்தா கட்டுபவர்களுக்கு சில பிரத்யேக வசதிகளை யூட்யூப் வழங்குகிறது.சந்தா கட்டுபவர்கள் உங்கள் சேனல் வீடியோக்களிலோ, லைவ் வீடியோக்களிலோ கம்மெண்ட் செய்யும்போது பிரத்யேகமான Badge இருக்கும். இந்த வசதி ஏற்கனவே சில கேமிங் சேனல்களுக்கு Sponsorships என்ற பெயரில் இந்த வசதியை கொடுத்திருக்கிறது. தற்போது அனைத்து வகை சேனல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
Channel Memberships பெறுவதற்கான தகுதிகள்:
- உங்கள் சேனலுக்கு ஒரு லட்சம் Subscribers இருக்க வேண்டும்.
- உங்கள் சேனல் Monetize ஆகியிருக்க வேண்டும்.
- இந்த வசதி கொண்டுவரப்பட்ட நாடுகளில் இருக்க வேண்டும். (அந்த பட்டியலைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்)
2. Merchandise (விற்பனை)
உங்கள் சேனல் மூலம் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யலாம். உங்கள் வீடியோக்களின் கீழ் நீங்க விற்பனை செய்யும் பொருள்கள் பார்வையாளர்களுக்கு தெரியும். அங்கிருந்து அவர்கள் நேரடியாக பணம் கட்டி வாங்கிக்கொள்ளலாம். இதற்காக Teespring நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது யூட்யூப். இந்த வசதி பத்தாயிரம் Subscribersகு மேலே உள்ள அமெரிக்க சேனல்களுக்கு மட்டும் யூட்யூப் தந்துள்ளது. மற்ற நாடுகளுக்கு விரைவில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
3. Premieres
யூட்யூபில் வீடியோக்களை அப்லாட் செய்ய Premieres என்னும் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோவை லைவ் ஆக வெளியிடலாம். மேலும் பார்வையாளர்களோடு சாட் செய்யலாம். லைவ் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்கனவே உள்ள Super Chat வசதியும் இதில் உண்டு. (Super Chat என்பது பார்வையாளர்கள் லைவ் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போது பணம் கட்டி கம்மெண்ட் செய்யலாம். அவர்களின் கம்மெண்ட் தனியாக, கலராக தெரியும்).
இந்த வசதி கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் தருவதாக யூட்யூப் தெரிவித்துள்ளது.
ஹரி பாபு.
http://srisaiinfotechandsolution.com
0 comments:
Post a Comment